முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலையான நிலையில், கரூரில் அவரது தீவிர ஆதரவாளர் ஒருவர் 5,000 பேருக்கு பிரியாணி வழங்கியுள்ளார். செம்படம்பாளையத்தைச் சேர்ந்த தோகை முருகன் தலைமையிலான திமுகவினர், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி, முட்டை மற்றும் தண்ணீர் பாட்டில்களை இன்று (செப்., 27) வழங்கி வருகின்றனர். இந்த பிரியாணி பொட்டலங்களை வருவோர் போவோர் என அனைவருக்கும் வழங்குகின்றனர்.