ஹரியானா சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான சாவித்ரி ஜிண்டால் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட பட்டியலில் 'இந்தியாவின் பணக்கார பெண்மணி' என்ற இடத்தை இவர் பிடித்தார். தேர்தல் விண்ணப்பத்தின் போது, இவர் கொடுத்த தகவலின் படி, தற்போதைய இவருடைய சொத்து மதிப்பு ரூ.270 கோடி ஆகும்.