திரெளபதியம்மன் கோவிலில் பீமன் கீசகன் வதம்

83பார்த்தது
திரெளபதியம்மன் கோவிலில் பீமன் கீசகன் வதம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் திரெளபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா 6ஆம் நாள் திருவிழாவான நேற்று (மே 18) பீமன் கீசகன் வதம் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு பீமன் மகாபாரதத்தில் வருவது போல் வேடம் புரிந்து காவடியை பிடித்துக்கொண்டு கெதையுடன் கீசகனை தெருத்தெருவாக விரட்டிப் பிடிக்கும் காட்சி பக்தர்களிடையே மெய்சிலிர்க்க வைத்தது. பீமன் செல்லக்கூடிய இடமெல்லாம் பக்தர்கள் அபிஷேகம் செய்து பீமனுக்கு பிடித்த சர்க்கரையால் அரிசியை கலந்து கொடுத்து பீமனிடம் ஆசி பெற்றனர்.

இன்று(மே 19) அர்ஜுனன் தபசும், நாளை(மே 20) திங்கள்கிழமை இரவு அம்மன் சிங்கவாகனத்தில் எழுந்தருளி காளிவேடம் புரிந்து நான்கு ரதவீதியில் பவனி வரும், இரவு அரவான் பலி கொடுத்து கருப்புசாமி வேடம் புரிந்து காவல் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி