தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஏவுதள மையம் அமைக்கப்பட உள்ள 1,500 ஏக்கரில் 'விண்வெளி பூங்கா' அமைக்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 'டிட்கோ' நிறுவனம் இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் தற்போது நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் வங்காள விரிகுடா கடற்கரையில் ராக்கெட் ஏவுதளம் மட்டுமே உள்ளது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.