BREAKING: CSK அணிக்கு இமாலய இலக்கு

16267பார்த்தது
BREAKING: CSK அணிக்கு இமாலய இலக்கு
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் மோதும் கடைசி பிளே ஆஃப் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. வாழ்வா சாவா என்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்நிலையில் முதல் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 218/5 எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஃபாப் டு பிளிசி 54 ரன்கள், விராட்கோலி 47 ரன்கள், ரஜத் படிதார் 41 ரன்களும் எடுத்துள்ளனர். 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்க உள்ளது.

தொடர்புடைய செய்தி