2019-ம் ஆண்டு பரத் 'காளிதாஸ்' என்ற திரில்லர் படத்தில் நடித்து இருந்தார். போலீஸ் அதிகாரியாக நடித்த அந்தப்படம் மக்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. அந்தப்படத்தினை ஸ்ரீ செந்தில் இயக்கினார். தற்போது, இதன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்நிலையில், 'காளிதாஸ் 2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். கோடைவிடுமுறையில் படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.