சிங்கமுகத்துடன் காட்சி தரும் பிரத்யங்கரா தேவியை வழிபடுபவர்களுக்கு பூர்வ ஜென்ம தோஷங்கள் நீங்கும். கும்பகோணம் ஐயாவாடி பிரத்யங்கரா கோயிலில் அமாவாசை தினத்தன்று நடைபெறும் ஹோமம் மற்றும் யாக பூஜைகளில் கலந்து கொள்பவர்களுக்கு கிரகங்களால் ஏற்படும் தடைகள் நீங்கும். பாவங்கள் நீங்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும். கரு சிதைவு, கரு கலைதல், பில்லி, ஏவல், சூனியம் போன்ற கோளாறுகளையும் பிரத்தியங்கரா தேவி நீக்க வல்லவள்.