இனி சலூன் கடைக்கு போனா உஷாராக இருங்க..

566பார்த்தது
உத்திரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியில் உள்ள சலூனில் பணிபுரியும் ஒரு முடிதிருத்தும் நபர் தனது கையில் எச்சிலை துப்பிய படி வாடிக்கையாளருக்கு மசாஜ் செய்கிறார். இந்த வீடியோ சுமார் 15 நாட்கள் முன்னதாக எடுக்கப்பட்டது. ஆனால் இது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதனால், இந்த வீடியோ போலீசாரின் கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து போலீசார் அந்நபரிடம் விசாரணையை தொடங்கினர். தற்போது சலூன் உரிமையாளர் கடையை பூட்டிவிட்டு தலைமறைவாக உள்ளார்.

தொடர்புடைய செய்தி