பைக்கை சீஸ் செய்ய வங்கி.. கதறி அழுத இளைஞர்..

54பார்த்தது
ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தரணிதரன் (18). இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ. 5,000 முன்பணம் செலுத்தி தவணை மூறையில் பைக் வாங்கியுள்ளார். ஆனால், 2 மாதங்களாக கடன் தவணை செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால், அந்த பைக்கை தனியார் வங்கி ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். இதனால், அந்த இளைஞர் வங்கி வாசலில் அமர்ந்து கதறி அழுதுள்ளார். தனக்கு பைக்கை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் போலீசார் புகாரை எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி