வழுக்கு மரம் ஏறும் போட்டி.. இளைஞர் பலி

55பார்த்தது
வழுக்கு மரம் ஏறும் போட்டி.. இளைஞர் பலி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கம்பிளியம்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களின் திருவிழா 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த கோளில் திருவிழா தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று (ஜூன் 1) கழுகு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. இந்நிலையில் மரம் ஏறும் இளைஞர்களுக்கு உதவ கீழே சில இளைஞர்கள் நிற்பார்கள். அந்த வகையில் சுப்பிரமணி (30) என்பவர் மரம் ஏறுபவர்களுக்கு உதவும் போது நெஞ்சு வலி ஏற்பட்டது . இவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி