பாலாவின் 'வணங்கான்' புதிய போஸ்டர் வெளியீடு

72பார்த்தது
பாலாவின் 'வணங்கான்' புதிய போஸ்டர் வெளியீடு
இயக்குநர் பாலா இயக்கத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் வணங்கான். இதில் அருண் விஜய் நாயகனாகவும், ரோஷினி பிரகாஷ் நாயகியாகவும் நடிக்கின்றனர். மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்தில் வருகிறார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பெரும்பாலான படப்பிடிப்பு கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது. சமீபத்தில் வணங்கான் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி