விழுப்புரம்: தழுதாளியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வேக வைத்த முட்டையில் துர்நாற்றம் வீசியதாக புகார் எழுந்த நிலையில் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்று (டிச. 09) வந்த வட்டார வளர்ச்சி அலுவலர், பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதன்பின்னர் முட்டைகள் பள்ளம் தோண்டப்பட்டு மொத்தமாக அழிக்கப்பட்டது.