பெண்களுக்கு வயதாக வயதாக உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் எலும்பில் உள்ள கால்சியம் மிக வேகமாக குறைந்து எலும்புகள் பலவீனமாகிறது. இதனால் பெண்களுக்கு முதுகு வலி ஏற்படுகிறது. மேலும் இந்தியாவில் மில்லியன் கணக்கான பெண்கள் ஆஸ்டியோபோரோசிஸ் என்கிற பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இது பெரும்பாலும் 50 வயதுக்கு மேல் தான் ஏற்படுகிறது. இதன் பிரச்சனை எலும்புகள் பலவீனமாகும் போது முழு முதுகு எலும்பு வளைந்து சிலருக்கு கூன் விழும் அபாயமும் உண்டு.