பறவைக் காய்ச்சல்: கோழி இறைச்சி விற்பனைக்கு தடை

79பார்த்தது
பறவைக் காய்ச்சல்: கோழி இறைச்சி விற்பனைக்கு தடை
கேரளாவின் கோட்டயத்தில் உள்ள மன்னார்க்காடு உள்ளூர் கோழி வளர்ப்பு மையத்தில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 9,000 கோழிகள் வளர்க்கப்படுவதாக விலங்குகள் நலத்துறை தெரிவித்துள்ளது. மத்தியப்பிரதேசத்தின் போபாலில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹை செக்யூரிட்டி அனிமல் டிசீசஸ் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் H5N1 வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

மன்னார்க்காடு ஊராட்சிக்குட்பட்ட 12, 13, 14 வார்டுகளிலும், புதுப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட இரண்டு மற்றும் மூன்று வார்டுகளிலும் நேற்று முதல் (மே 23) கோழி, வாத்து, காடை மற்றும் பிற நாட்டுப் பறவைகளின் முட்டை, இறைச்சி, உரம் விற்பனை மற்றும் இறக்குமதிக்கு மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி