ஒரே வாகனத்தில் ஆட்டோ ப்ளஸ் ஸ்கூட்டர்

561பார்த்தது
ஒரே வாகனத்தில் ஆட்டோ ப்ளஸ் ஸ்கூட்டர்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்குச் சொந்தமான சர்ஜ் என்ற ஸ்டார்ட் அப், மூன்று சக்கர ரிக்ஷாவிலிருந்து மின்-ஸ்கூட்டராக மாறக்கூடிய மின்சார வாகனமான (EV) S32 ஐ வெளியிட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் வாகனமானது கிறிஸ்டோபர் நோலனின் 'தி டார்க் நைட்' இருந்து 'பேட்மொபைல்' மூலம் இன்ஸபிரேசனாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தேவைப்படும்போது சரக்கு வாகனமாகவும் அதிக ஆற்றல் கொண்ட ஸ்கூட்டராகவும் மாற்றலாம். இரண்டிற்கும் இடையே உள்ள S32 என்ற ஆப்ஷனை கொண்டு எளிதாக மாற்றிக்கொள்ளலாம். பேட்டரி திறன் 11 kWh மற்றும் 3.5 kWh ஆகும். அதிகபட்ச வேகம் முறையே 50 கிமீ மற்றும் 60 கிமீ ஆகும். அதிகபட்சமாக 500 கிலோ சுமை சுமக்கும். விலைகுறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி