விமான நிறுவனங்களில் ஒன்றான விஸ்தாரா, சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ‘ஃப்ரீடம் சேல்’-ஐ அறிவித்துள்ளது. இந்த ஃப்ரீடம் சேல் மூலம், ஒருவழி உள்நாட்டுப் பயணத்திற்கான குறைந்தபட்ச விமான டிக்கெட் விலை ரூ.1578 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவு 23.59 வரை முன்பதிவு செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்த ஆஃபரை பயன்படுத்தி பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.