ஆடி 1: கொங்கு மாவட்டங்களில் நடக்கும் தேங்காய் சுடும் திருவிழா.!

77பார்த்தது
ஆடி மாதத்தின் முதல் நாளான இன்று (ஜூலை 17) கொங்கு பகுதியில் கடைபிடிக்கப்படும் தேங்காய் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அழிஞ்சி செடி குச்சியில் தேங்காயை சொருகி, அதை தீயிலிட்டு உண்ணும் பண்டிகை கிராமப்புறங்களில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. புதுமணத் தம்பதிகள் தலை ஆடியை கொண்டாடும் பொழுது குடும்பத்துடன் இணைந்து தேங்காய் சுட்டு அதை விநாயகருக்கு படைத்து உண்ணும் பழக்கம் காலம் காலமாக கொங்கு பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி