நான்ஸ்டிக் பாத்திரங்கள் அடி பிடிக்காது, விரைவில் சமைக்கக் கூடியது, குறைந்த எண்ணெய் போதுமானது என பல வகையான காரணங்களுக்காகவே பலரும் இதை பயன்படுத்துகின்றனர். ஆனால் நான்ஸ்டிக் பாத்திரங்களில் இருக்கும் வழவழப்புத் தன்மைக்காக பயன்படுத்தப்படும் polytetrafluoroethylene (PTFE) உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது என்கின்றனர் மருத்துவர்கள். இதில் உணவுகளை அதிக சூடுபடுத்தினால் புற்றுநோய் அபாயமும் உள்ளது.