மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி.. கதவை உடைத்து காத்த போலீஸ்

85பார்த்தது
மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி.. கதவை உடைத்து காத்த போலீஸ்
தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. கதவை தட்டியும் வீட்டை திறக்காததால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் வீட்டிற்கு தீ வைத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், கதவை உடைத்து மாணவியையும், அந்த இளைஞரையும் மீட்டனர். போலீசார் தாமதமாக வந்ததாக கூறி, உறவினர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதில் போலீசார் சிலர் காயமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி