டென்மார்க் பிரதமர் மீது தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்

52பார்த்தது
டென்மார்க் பிரதமர் மீது தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்
டென்மார்க் பிரதமர் மேட் பிரெடெரிக்சன் நேற்று மாலை மத்திய கோபென்ஹாகென்னில் உள்ள குல்டோர்வெட் சதுக்கத்தில் நடந்து சென்றபோது மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் பிரதமர் மேட் பிரெடெரிக்சன் அதிர்ச்சி அடைந்துள்ளார் என பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டது. பிரதமரை தாக்கிய நபரை கைது செய்த டென்மார்க் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "டென்மார்க் பிரதமர் மேட் பிரெடெரிக்சன் மீதான தாக்குதல் பற்றிய செய்தி அறிந்து கவலையடைந்தேன். தாக்குதலை கண்டிக்கிறோம். எனது நண்பர் நல்ல ஆரோக்கியம் பெற வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி