நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம்... வீடியோ...

53பார்த்தது
400 பயணிகளுடன் சென்ற ஏர் கனடா போயிங் விமானம் நடுவானில் தீப்பற்றி எரியும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று நள்ளிரவு டொராண்டோ விமான நிலையத்திலிருந்து போயிங் 777-333 (ER) ரக விமானம் பாரீஸ் நோக்கி புறப்பட்ட சில நொடிகளில் வலது எஞ்சினில் இருந்து சிறு தீப்பொறி ஏற்பட்டது. அதன்பின், தீ இஞ்சின் முழுவதும் பரவியது. இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட விமானிகள் சாமர்த்தியமாக விமானத்தை டொராண்டோ விமான நிலையத்தில் தரை இறக்கினர். விமானத்திலிருந்த 389 பயணிகளும், 13 விமான ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தொடர்புடைய செய்தி