ஆசிய ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா- தென்கொரியா இன்று மோதல்

73பார்த்தது
ஆசிய ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா- தென்கொரியா இன்று மோதல்
8வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் இந்தியா (15 புள்ளி), பாகிஸ்தான் (8), சீனா (6), தென்கொரியா (6) ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இன்று மதியம் 3:30 மணிக்கு நடக்கும் ஒரு அரையிறுதியில் நடப்பு சாம்பியனான ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, தென்கொரியாவுடன் மோதுகின்றது. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா 5 லீக்கிலும் மகத்தான வெற்றிகளை பெற்றது.

தொடர்புடைய செய்தி