தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாகப்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16.4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மேலும், நாகூர் கோமதி காலனி பகுதியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால், பொதுமக்களை அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் தங்கவைக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மழைநீர் வீட்டிற்குள் புகுந்ததுகூட தெரியாமல் ஒருவர் அசந்து தூங்கிய நிலையில், அவரை அதிகாரிகள் தட்டி எழுப்பினர்.