ஜெயங்கொண்டத்தில் புதிய டி.எஸ்.பி பொறுப்பேற்பு

5340பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டாக இருந்த ரவிச்சந்திரன், தற்போது பணி மாறுதல் பெற்று பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டாக பொறுப்பேற்றுள்ளார். தற்போது தர்மபுரியில் போலீஸ் துணை சூப்பிரண்டாக இருந்த ராமச்சந்திரன் பணி மாறுதல் பெற்று ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டாக நேற்று பொறுப்பேற்றுள்ளார். இவர் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜூவை சந்தித்து வாழ்த்து பெற்று வந்தார்.

மேலும் தற்போது ஜெயங்கொண்டம் உட்கோட்டம் காவல் நிலையங்களான ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, தா பழூர், விக்ரமங்கலம் தூத்தூர், உடையார்பாளையம் இரும்புலி குறிச்சி மற்றும் ஜெயங்கொண்டம் போக்குவரத்துக் போலீஸ் நிலையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் சப் இன்ஸ்பெக்டர்கள், மற்றும் போலீஸார்கள் உள்ளிட்டோர் சென்று ஜெயங்கொண்டம் புதிய போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி