உருளைக்கிழங்கை கண்களைச் சுற்றி தடவினால் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் நீங்குவது மட்டுமின்றி வீக்கமும் குறையும். உருளைக்கிழங்கு சாற்றை முகத்தில் தடவுவதன் மூலம் சருமத்தின் தன்மை மேம்படுவதோடு, பளபளப்பாகவும் இருக்கும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதனால் தோல் எரிச்சல், அலர்ஜி போன்ற பிரச்சனைகள் நீங்கும். மேலும், இந்த சாற்றின் குணங்களால் புள்ளிகள் மற்றும் சுருக்கங்களும் குறைகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்