அதிமுகவிடம் ஆதரவு கேட்ட அன்புமணி ராமதாஸ்.!

55பார்த்தது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் திமுக, பாமக, நாதக ஆகிய 3 கட்சிகள் போட்டியிடுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது. அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த நிலையில் விக்கிரவாண்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ் எம்ஜிஆர் திமுகவை ஒழிக்க வேண்டும் என நினைத்தார். அதற்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதிமுக, பாமக வேட்பாளரை ஆதரித்து திமுகவை தோற்கடிக்க வேண்டும்” என உணர்ச்சி பொங்க பேசினார்.

நன்றி: ABP Nadu
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி