மதராசபட்டனம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன் தாண்டவம், ஐ, தெறி, 2.0, மிஷன் சாப்டர் 1 போன்ற படங்களில் நடித்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் அந்நாட்டு பிரபல நடிகரான எட்வர்டு வெஸ்ட்விக்கை காதலித்து வந்தார். இந்நிலையில் காதலர் எட்வர்டு வெஸ்ட்விக்கை நடிகை எமி ஜாக்சன் திருமணம் செய்துகொண்டார். இருவரின் திருமணம் இத்தாலியின் அமல்ஹி கடற்கரை பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 25) நடைபெற்றது.