பூசணி விதைகளில் புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து, மெக்னீசியம், ஆக்ஸிஜனேற்றத்தின் போன்றவைகள் உள்ளன. இதனை காலை உணவில் நாம் சேர்த்துக் கொள்வதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். ஊட்டச்சத்துக்கள் கொண்ட பூசணி விதைகளுடன் காலை உணவை தொடங்கினால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கொலஸ்ட்ரால் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. மேலும், இது செரிமானத்திற்கு உதவுகிறது. முக்கியமாக மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது என்கின்றனர்.