தமிழ்நாட்டில் மேலும் 32 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக 24 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி, கோவை, பெரம்பலூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர், கரூர், நாகை, சேலம், தென்காசி, தர்மபுரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்ட SP-கள், உள்பட 24 IPS அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.