தெலங்கானா: சஞ்சல்குடா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு கீதா ஆர்ட்ஸ் அலுவலகத்திற்கு வந்த நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது ஜூப்லி ஹில்ஸில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. நான் நலமாக உள்ளேன். கவலைப்படத் தேவையில்லை. அது ஒரு விபத்து. துரதிர்ஷ்டவசமான சம்பவம். நான் சட்டத்தை மதிக்கிறேன். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. என்னால் எதுவும் சொல்ல முடியாது. ரேவதி குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்றார்.