தமிழ் சினிமாவின் அதிக ரசிகர்களை கொண்ட பிரபல நட்சத்திர ஜோடிகளில் மிக முக்கியமானவர்கள் அஜித் - ஷாலினி. 1999-ம் ஆண்டு ‘அமர்க்களம்’ படப்பிடிப்பின் போது, படத்தின் ஹீரோ அஜித்துக்கும் ஷாலினிக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த காதல் ஜோடிகள் கல்யாணத்தில் இணைந்தது. அவர்களின் காதல் பயணம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், அஜித் - ஷாலினி திருமண அழைப்பிதழ் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.