ஜெயக்குமாருக்கு வியர்க்காமல் இருக்க உழைத்த தொண்டர் (வீடியோ)

82பார்த்தது
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஜூன் 7) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அண்ணாமலை 2026ல் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். அதுகுறித்து உங்கள் கருத்து என்ன என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள அயோத்தியிலேயே அவர்களால் ஜெயிக்க முடியவில்லை. தமிழகத்தில் எப்படி ஜெயிப்பார்கள் என கூறினார். அப்போது ஜெயக்குமாருக்கு வியர்க்கக் கூடாது என பேட்டி முழுவதும் டவர் ஃபேனை கையில் ஏந்தியபடியே தொண்டர் ஒருவர் நின்றிருந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி