கேரளாவில் Al கேமராக்கள் கண்டறிந்த 40 லட்சம் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராத நோட்டீஸ் அனுப்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது. கேமராவை கையாளும் Keltron நிறுவனம் - அரசு இடையிலான ஒப்பந்தத்தில் ஆண்டுக்கு 25 லட்சம் அபராத நோட்டீஸ்கள் மட்டுமே விதிக்க வழிசெய்யப்பட்டது. அந்த எண்ணிக்கையை தாண்டியதும் நோட்டீஸ்களை அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அம்மாநில அரசுக்கு சுமார் ரூ.200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.