மறைந்த முன்னாள் முதலமைச்சர் ராஜாஜியின் 146வது பிறந்தநாளையொட்டி, இன்று (டிச., 10) சென்னை பாரிமுனையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேர்பாபு, சென்னை மேயர் பிரியா, செய்தித்துறை இயக்குநர் வைத்திநாதன், கூடுதல் இயக்குநர்கள் அன்புச்சோழன், செல்வராஜ் மற்றும் அலுவலர்கள் மலர் தூவி மரியதை செலுத்தினர்.