ஷாருக்கான் நடித்து வெளியான 'ஜவான்' படத்தை இயக்கி அட்லீ பாலிவுட்டில் அறிமுகமானார். தற்போது அட்லீ பாலிவுட்டை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மும்பையில் அட்லீ தனது குழுவினருடன் கதையை உருவாக்கி வருவதாகவும், இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக அட்லீ, அல்லு அர்ஜுனை வைத்து தெலுங்கில் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.