நடிகர் வடிவேலு 2024 மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. சமீபத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்றிருந்த நிலையில், திமுகவுடன் அவர் நெருக்கம் காட்டி வருவதாகவும், தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வடிவேலு, தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும், திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியிருந்த 'மாமன்னன்' திரைப்படத்தில் முழு அரசியல்வாதியாக வடிவேலு நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.