ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே
சூர்யா கூட்டணியில் மார்க் ஆண்டனி திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. இந்நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும், ஊக்கமளித்து பாராட்டியதாகவும் ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். மேலும், 'மார்க் ஆண்டனி' படத்தை இந்தியில் வெளியிடுவதற்காக மும்பையில் உள்ள சென்சார் போர்டு அலுவலக அதிகாரிகள் 76.5 லட்சம் லஞ்சமாக பெற்றதாக நடிகர் விஷால் குற்றச்சாட்டியது குறிப்பிடத்தக்கது.