நடிகை த்ரிஷாவின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் தொகுப்பாளர் விஜய் சாரதி, உங்களின் அடுத்த ப்ளான் என்ன என்று கேட்க, "CM ஆக வேண்டும்" என்று த்ரிஷா சொல்கிறார். இதை கேட்ட தொகுப்பாளர், சினிமாவிலா அரசியலிலா என்று கேட்க, அரசியலில் தான் நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் இன்னும் 10 வருடத்தில் என்று சொல்கிறார். இந்த வீடியோ பதிவு வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.