விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், “பட்டாசு விதிமீறல் குறித்து திமுக அரசு எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. அனைத்து பட்டாசு ஆலைகளிலும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளனவா என்று சோதனை நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். இந்த வெடிவிபத்தில் 4 கட்டிடங்கள் தரைமட்டமான நிலையில், மீட்பு பணிகள் நடந்துவருகிறது.