ஞானசேகரன் வீட்டில் சோதனை.. சிக்கியது முக்கிய ஆவணங்கள்

75பார்த்தது
ஞானசேகரன் வீட்டில் சோதனை.. சிக்கியது முக்கிய ஆவணங்கள்
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் தொல்லை வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் இன்று (ஜன.4) சோதனை செய்து வருகின்றனர். அதில், முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்ய பயன்படுத்திய லேப்டாப் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, சம்பவத்தின் போது ஞானசேகரன் அணிந்திருந்த தொப்பியை அவரது வீட்டிலிருந்து அதிகாரிகள் கைப்பற்றி இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி