'தேனி' வரலாற்றை பதிவு செய்யும் அரசு அருங்காட்சியகம் ஆண்டிபட்டியில் அமைந்துள்ளது. இங்கு பழங்கால கல்வெட்டுகள், சிலைகள் உள்ளிட்ட பழங்கால பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு நட்சத்திர ஹோட்டல் போல பிரமாண்டமாக காட்சியளிக்கும் இந்த அருங்காட்சியகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றாக உள்ள கல்வெட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.