'கங்குவா' படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கிய நடிகர்
சூர்யா, 2 வாரம் வீட்டில் தங்கி ஓய்வெடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
"கங்குவா" படத்தின் சண்டை காட்சியில் நடித்து கொண்டிருந்தபோது, ரோப் கேமரா ஒன்று திடீரென சூர்யாவின் மேல் அறுந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சையில் இருந்து தற்போது குணமாகியுள்ள
சூர்யா, வீட்டிலே 2 வாரன் தங்கி ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.