நடிகர் மன்சூர் அலிகான் ஐசியூ-வில் அனுமதி

44564பார்த்தது
நடிகர் மன்சூர் அலிகான் ஐசியூ-வில் அனுமதி
நடிகர் மன்சூர் அலிகான் சென்னை கேகே நகர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மன்சூர் அலிகானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூர் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடும் மன்சூர் அலிகான் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து குடியாத்தம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி