கடலூர் அருகே தனியார் பேருந்து ஓட்டுநரிடம் நடிகரும் இயக்குனருமான சேரன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடத்தில் தனியார் பேருந்து ஓட்டுனர் அதிக அளவு சத்தத்துடன் ஒலி எழுப்பிக் கொண்டே வந்ததுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சேரன் நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு அதிக ஒலி எழுப்பிய பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.