ராமேஸ்வரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கம்போல் கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது, நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 8 பேரை, இலங்கை கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள், தொடர்ந்து அராஜக நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படைக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.