சென்னையில் விபத்து உயிரிழப்பு இல்லாத புத்தாண்டாக அமைந்தது என்று சென்னை
போக்குவரத்து காவல்துறை தெரித்துள்ளது.
போக்குவரத்து காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியாக நிறைவு பெற்றது. புத்தாண்டு பாதுகாப்பு குறித்து சென்னை காவல்துறை வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. டிச.31ஆம் தேதியான நேற்று சென்னை முழுக்க
போக்குவரத்து காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டது. மெரினா சாலைகளில் இரவு 8 மணிக்கு மேல் வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்படவில்லை.