இரு பைக்குகள் மோதி விபத்து.. தூக்கி வீசப்பட்ட சிறுமி(வீடியோ)

58பார்த்தது
மதுரை நகரில் இருந்து உத்தங்குடி செல்லும் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இம்மாதம் 11ம் தேதி ஒருவர் தனது மகளுடன் பைக்கில் சாலையை கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு பைக் வந்து அவர்கள் மீது மோதியது. விபத்தின் தீவிரத்தால் சிறுமி கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே, இந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி