சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் தனியார் மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டில் நேற்று (ஆக.10) இரவு மின்தடை ஏற்பட்டதால் மின் ஊழியர்கள் சரி செய்து விட்டு சென்றுள்ளனர். கேபிளில் பிரச்சனை இருப்பதாக கூறிச் சென்ற நிலையில், இன்று (ஆக.11) அதிகாலை 2 மணி அளவில் மின்சார பெட்டி வெடித்தது. இதில், மின்சார பெட்டி அருகே இருந்த கார்கள், வீட்டின் முன்பகுதியில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.