சிவகங்கை: இளையான்குடி அரசு மருத்துவமனையில் 12 மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்ற நிலையில், பல மாதங்களாக தலைமை மருத்துவர் மட்டுமே பணியில் உள்ளார். போதிய மருத்துவர்கள் இல்லாததால் இரவு நேரங்களில் செவிலியர்கள் மருத்துவம் பார்க்கும் நிலை உள்ளது. அவசர சிகிச்சை என்றாலும் செவிலியர்களே மருத்துவம் பார்த்து சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நோயாளி ஒருவருக்கு செவிலியர் மருத்துவம் பார்க்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.