ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மலை பெய்தது. இந்நிலையில், இன்று (டிச.01) திருவண்ணாமலை மாவட்டம் பள்ளியம்பட்டு கிராமத்தில் மழை பெய்துகொண்டிருந்த நிலையில், திடீரென விழுந்த இடியால் அங்கு போடப்பட்டிருந்த சாலை சுக்குநூறாக இடிந்து நொறுங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அந்த இடத்தில குவிந்தனர். மேலும் இடி விழுந்ததை நேரில் கண்ட மக்கள் வெடிகுண்டு வெடித்தது போல் நெருப்பு கிளம்பியது என கூறியுள்ளனர்.